மீனாட்சிபுரம் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.,
இந்த கிராமத்தில் உள்ள மக்கள் ரேசன் பொருட்களை பெற இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நல்லுத்தேவன்பட்டிக்கு சென்று பொருட்களை வாங்கி வரும் சூழல் நிலவி வந்தாக கூறப்படுகிறது.,

லிங்கநாயக்கன்பட்டி அல்லது மீனாட்சிபுரம் கிராமத்தில் ரேசன் கடை அமைத்து பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.,
கிராம மக்களின் கோரிக்கையான புதிய நியாயவிலை கடை வேண்டும் என்ற கோரிக்கையை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், கடந்த சட்டமன்ற கூட்ட தொடரின் போதும், அதற்கு முன்பாகவும் என இரு முறை கோரிக்கையாக முன்வைத்தார்.,

இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு லிங்கநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிய ரேசன் கடை அமைக்க உத்தரவிட்டது, இந்த புதிய ரேசன் கடையை இன்று உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்., மேலும் தற்காலிகமாக கிராமத்தின் கலை அரங்கில் இந்த ரேசன் கடை செயல்படும் எனவும் விரைவில் ரேசன்கடைக்கு புதிய கட்டிடத்தை சொந்த செலவில் கட்டி தருவேன் என பொதுமக்களிடம் எம்எல்ஏ அய்யப்பன் உறுதியளித்த நிலையில் கிராம மக்களும் நன்றி தெரிவித்தனர்.,











; ?>)
; ?>)
; ?>)