மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் உசிலம்பட்டி கல்வி மாவட்ட சாரண சாரணியர் இயக்கத்தின் 50 வது ஆண்டு பொன்விழா, சாரண சாரணியர் இயக்க மாநில அமைப்பு ஆணையர் சக்திவேல், மாநில பயிற்சி ஆணையர் நாகராஜன் தலைமையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.,

மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கிய இந்நிகழ்வில்,
உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 30 பள்ளிகளைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட சாரண சாரணியர் இயக்க மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.,
தொடர்ந்து 50 வது ஆண்டு பொன்விழா மலரை சாரண சாரணியர் இயக்க மாநில ஆணையர்கள் சக்திவேல் மற்றும் நாகராஜன் வெளியிட மதுரை மாவட்ட மற்றும் உசிலம்பட்டி வட்டார நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.,












; ?>)
; ?>)
; ?>)