திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி கிராமத்தில் மந்தை முத்தாலம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலை பல ஆண்டுகளாக கிராம மக்கள் சார்பில் நிர்வாகம் செய்து பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிராம மக்கள் இரு தரப்பைனரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு தரப்பினர் கோயிலை அறநிலையத்துறை கையபடுத்த வேண்டும் என மனு அளித்திருந்த நிலையில் கோயிலை கையகப்படுத்த அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் வெளியிட்ட நிலையில் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து இந்த கோயிலை அறநிலைத்துறை கையகபடுத்த கூடாது என்று பல்வேறு அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், அறநிலையத்துறை திண்டுக்கல் இணை ஆணையர் ஆகியோரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம மக்கள் சார்பில் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நத்தம் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே சிறுகுடி கிராம மக்கள் மற்றும் பாஜக கட்சியினர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் தலைமையிலான பாஜகவினர் மற்றும் சிறுகுடி ஊராட்சி கிராம மக்கள் ஒன்றிணைந்து அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராம.ஶ்ரீனிவாசன் பேட்டி அளித்த போது…
SIR குறித்து திமுகவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு…
SIR குறித்து திமுக இரட்டை நிலைப்பாட்டில் உள்ளது ஒரு பக்கம் நீதிமன்றம் சென்று விட்டு மறுபக்கம் அந்த படிவங்களை பூர்த்தி செய்வதிலும் அதே படிவங்களை திமுகவினர் அதிக அளவில் பெற்றுச் செல்வதும் தொடர்கதை ஆகி வருகிறது.
டெல்லியில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு குறித்த கேள்விக்கு…

காங்கிரஸ் ஆட்சியில் தான் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சியில் மாவோயிஸ்டுகள் தொல்லை அதிக அளவில் இருந்தது. தற்போது இந்தியாவிலேயே 22 காவல் நிலையங்களுக்கு மட்டும் தான் மாவோயிஸ்டுகளால் அச்சுறுத்தல் உள்ளது. தற்போது நடைபெறுவது மன்மோகன் சிங் ஆட்சியோ, இந்திரா காந்தி ஆட்சியோ, ராஜீவ் காந்தி ஆட்சியோ அல்ல மோடி ஆட்சி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உள்ளனர். தீவிரவாதம் முழுமையாக ஒழிக்கப்படும்.
கோவில்களை அறநிலையத்துறை கையகப்படுத்துவது குறித்த கேள்விக்கு…
பொதுவாக சாலை விரிவாக்கத்தின் போது கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அதன் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது போல் கோவில்களை கையகப்படுத்தும் போது நஷ்ட ஈடு வழங்கினால் இந்திய அரசு மட்டுமல்ல அமெரிக்க அரசாங்கமே திவால் ஆகிவிடும் என்று பேசினார்.











; ?>)
; ?>)
; ?>)