எஸ்ஐஆர் மூலம் தமிழக மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது என்று கனிமொழி எம்பி குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் கைவிட கோரி தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி தூத்துக்குடியில், சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் தென் மண்டல தேர்தல் பொறுப்பாளர் கனிமொழி கருணாநிதி எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி பேசுகையில், வாக்குரிமை என்பது நமது அடிப்படை உரிமை. அது இல்லையென்றால் ரேஷன், உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காது. பிகாரில் இஸ்லாமியர், தலித், பெண்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பதால் தமிழகத்தின் அடிப்படை உரிமைகளை பாஜக அரசு பறித்து வருகிறது. இதன் மூலம் தமிழகத்தின் தொகுதிகளும் பறிபோகும் வாய்ப்புள்ளது. 3 முறை வாக்களிக்காவிட்டால் பிரஜையின் உரிமை பறிக்கப்படும். அதுபோல தமிழகத்திலும் நடத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. அவர்களுக்கு அதிமுக நல்ல அடிமைபோல செயல்பட்டு வருகிறது என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏபிசிவி சண்முகம், மதிமுக அரசியல் ஆலோசனை குழு செயலாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மெபூப், எம்எல்ஏக்கள் ஜி.வி. மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ் எம். சி சண்முகை ஆர்ப்பாட்டத்தில் சி பி ஐ மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி எஸ் முரளிதரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கருமபன், மதிமுக மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ரமேஷ், மாநகர செயலாளர் முருக பூபதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, விடுதலை சிறுத்தை மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், ம. ம கட்சி மாவட்ட பொறுப்பாளர் ஆசாத், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அகமது இக்பால், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பி எம் அற்புதராஜ், ஆதித்தமிழர் பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் முத்துக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி, ஆதித்தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் நம்பிராஜ், பாண்டியன் திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் முருகன், மக்கள் நீதி மையம் கட்சி மாவட்ட செயலாளர் ஜவகர் உள்பட மத சார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்”
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏபிசிவி சண்முகம், மதிமுக அரசியல் ஆலோசனை குழு செயலாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மெபூப், எம்எல்ஏக்கள் ஜி.வி. மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ் எம். சி சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்











; ?>)
; ?>)
; ?>)