டெல்லி செங்கோட்டை ரயில் நிலையம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சார்பு ஆய்வாளர் கேசவன், ரயில்வே தனிப்பிரிவு காவலர் மணிவண்ணன் மற்றும் காவலர்கள் நடைமேடைகள், கார் பார்க்கிங், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், பார்சல் அலுவலகம்,பயணிகள் உடைமைகள் மற்றும் ரயில் வண்டிகளில் சோதனை மேற்கொண்டனர்.

பழனி ரயில் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் கூட்டத்தினர் சோதனை மேற்கொண்டனர். கொடைரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பயண சீட்டு வழங்கும் இடம், கார் பார்க்கிங் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.











; ?>)
; ?>)
; ?>)