காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட முதியோர்கள் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், முதிர் கன்னிகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் புதுச்சேரி அரசின் உதவி தொகைக்கான அடையாள அட்டைகளை சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு வழங்கினார்.
முன்னதாக பேசிய ஜி.என்.எஸ் ராஜசேகரன் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பும் தற்பொழுதும் தொடர்ந்து செய்து வருவதோடு வருங்காலங்களிலும் சிறப்பாக மக்களுக்கான திட்டங்களையும் செயல்படுத்துவோம் என்று தெரிவித்தார். தேர்தலின் போது பலர் நாம் தேர்தலுக்குப் பிறகு திருநள்ளாற்றில் இருக்க மாட்டோம் என்று தெரிவித்தனர் ஆனால் தற்போது வரை நாம் இங்குதான் இருக்கிறோம் இப்படி கூறியவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என தெரிவித்தார்.
வரும் 14ஆம் தேதிக்குள்ளாக அனைவருக்கும் இந்த உதவித்தொகை வந்து சேரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முருகதாஸ் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் திருநள்ளாறு பகுதி பொதுமக்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.