• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

5 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்..,

ByAnandakumar

Nov 10, 2025

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட நபர்களை மீட்கும் பணிக்காக வருகை புரிந்த தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என தொடர்ந்து இன்று 5 வது நாளாக ஐந்து பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

மேலும், இன்று Power grid Corporation of inda Ltd., இந்தியாவின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் சிபிஐ விசாரணைக்கு ஆஜாராகி உள்ளனர்.