சென்னை அய்யப்பாக்கம், சந்தோஸ் நகரில் உள்ள பைன்ட்ரீ மழலை பள்ளியில், ஸ்மார்ட் கிட்ஸ் அகாடமி சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நோவா புக் ஆப் ரெகார்ட்ஸ் உலக சாதனை மற்றும் 2025க்கான போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.

3 முதல் 14 வயது வரை மாணவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், வண்ணம் தீட்டுதல், கலை மற்றும் கைவினை, பானை ஓவியம் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாடலாசிரியர் தமிழன் ராகுல் காந்தி மற்றும் திவேஷ் டான்ஸ் ஸ்டுடியோ நிறுவனர் ஸ்ரீதர் கலந்து கொண்டு, உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியை பைன்ட்ரீ மழலை பள்ளி நிறுவனர் பபிதா மற்றும் ஸ்மார்ட் கிட்ஸ் அகாடமி நிறுவனர் யுவராணி இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
🕊️ குழந்தைகள் உற்சாகத்துடன் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, கல்வியுடன் சேர்த்து திறமையையும் வெளிப்படுத்திய சிறப்பான விழாவாக அமைந்தது.











; ?>)
; ?>)
; ?>)