• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வரவிருக்கும் உலக அமைதி தினம்..,

ByPrabhu Sekar

Nov 9, 2025

சென்னையில், உலக சமாதான ஆலயம் சார்பில் இன்று காலை ஆறு மணிக்கு, எம்.ஐ.டி. பாலம் அருகிலிருந்து சிட்லபாக்கம் ஏரிக்கு எதிரிலுள்ள சென்னை சபை வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், உலக சமாதான அறக்கட்டளை – சென்னை சபை சிட்லபாக்கம், தாம்பரம் மாநகராட்சி 43வது மாமன்ற உறுப்பினர் மற்றும் அரிமா சங்க முன்னாள் ஆளுநர் சி. ஜெகன், மேலும் நல்லோர் வட்டம் பாலு குழுவினர் கலந்து கொண்டனர்.

அமைதி, அன்பு, ஒற்றுமை நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் நடைபெற்ற இப்பேரணியில், அனைவரும் கலந்து கொண்டு உலக அமைதிக்காக பிரார்த்திக்க அழைக்கப்பட்டனர்.

உலக சமாதான அறக்கட்டளை சார்பில் பேசுகையில், “உலகப் போர் முடிந்தபின் உலக அமைதிக்காக ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யும் பழக்கம் இருந்தது. அதனை மீண்டும் மக்களிடையே கொண்டு வரவே, ஒவ்வொரு நாளும் காலை 11 மணி 11 நிமிடத்திற்கு, உலகம் முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் அமைதிக்காக சிந்தனை செய்ய வேண்டும்,” என தெரிவித்தனர்.

மேலும், “அடுத்த ஆண்டு ஜெனிவா நகரில் குருமார்களுடன் இணைந்து உலக அமைதிக்கான மனு சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது,” என்றும் கூறினர்.