குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS.

இந்த வருடத்தில் மட்டும் 39 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
கடந்த 2020 ஆம் ஆண்டு 08 வயது சிறுமியை பாலியல் தாக்குதல் செய்ததாக விரிகோடு, தெற்றவிளை பகுதியை சேர்ந்த நேசமணி (61/20) என்பவர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண் 39/2020
u/s 7,8,9(m),10 of POCSO Act 12 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 05 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள்.

நீதிமன்ற வழக்கு விசாரணை சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், நீதிமன்ற காவலர், இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த மார்த்தாண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.











; ?>)
; ?>)
; ?>)