• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பணம் வாங்கி திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது..,

ByPrabhu Sekar

Nov 8, 2025

சென்னை மடிப்பாக்கம் சபரிசாலையில் சூப்பர் மார்கெட் வைத்து நடத்தி வருபவர் பேரின்பராஜா(55), இவரது கடையில் உறவினர் ஜியோ சுகன் என்பவரும் பணிபுரிந்து வருகிறார்.

ஜியோ சுகனுக்கு மேடவாக்கம் வீரபத்திர நகரை சேர்ந்த ஜான் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

ஜான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் தொழில் செய்ய ஜியோ சுகனிடம் 10 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என கேட்டுள்ளார், அவர் கடையின் உரிமையாளர் பேரின்பராஜாவிடம் அறிமுகபடுத்தி பணத்தை கடந்த 2023 மற்றும் 2024ம் ஆண்டு பல்வேறு தவணைகளாக சிறுக சிறுக 10 லட்சம் ரூபாயை வாங்கிக் கொடுத்துள்ளார். பணத்தை மூன்று மாதத்தில் திருப்பி தருவதாக கூறிய ஜான் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இது குறித்து பேரின்பராஜா மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் மடிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொழில் செய்ய பணம் வாங்கி மோசடி செய்து ஏமாற்றிய ஜானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.