கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமிக்குப் பிறகு கட்டப்பட்ட கீழமணக்குடி-மேலமணக்குடி இடையேயான இரும்பு பாலம் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

கடந்த எட்டு ஆண்டுகளாக பாலம் உடையும் நிலையில் இருந்து வந்தது, அதன் வழியாக மீனவர்கள் சிறிய வள்ளங்களில் செல்லும் போது மிகவும் சிரமத்துக்குள்ளாகி, எப்போது வேண்டுமானால் இடிந்து விழும் நிலையில் இருந்த இந்த பாலத்தை அகற்ற மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அவர்களிடமும் பாலத்தை அகற்ற கோரிக்கை வைத்தனர். பல ஆண்டுகளாக கிடப்பில் போடபட்டுள்ள கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் திருமதி அழகுமீனா அவர்களிடமும், துறைசார்ந்த அதிகாரிகளிடம் மிகவும் ஆபத்தான நிலமையை எடுத்து கூறி பாலத்தை அகற்றகேட்டுக் கொண்டார். இந்நிலையில் இன்று பாலம் அகற்றும் பணி இன்று தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் உதயம், வட்டார தலைவர் அசோக்ராஜ், மணக்குடி பங்கு தந்தை அஜன்சார்லஸ், கீழமணக்குடி பங்கு தந்தை ஜாண் வினோ, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன்,
மணக்குடி லாரன்ஸ், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கிங்ஸிலின், மணக்குடி மைக்கேல், நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் ஹெரால்ட் அந்தோணி, உதவி பொறியாளர் வித்யா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாலம் அகற்றும் பணி இன்று தொடங்கி உள்ளது அதன் அருகே செல்லும் சேதமடைந்த குடிநீர் குழாய் நாளை முதல் குடிநீர் வடிகால் வாரியம் (TWARD) மூலம் சீரமைக்கும் பணி தொடங்கும் என விஜய்வசந்த் எம்பி தெரிவித்தார்.











; ?>)
; ?>)
; ?>)