• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பைக்கில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை கொள்ளை..,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கீழவன்னிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மனைவி தமிழ்ச்செல்வி (வயது42), இவர் கடந்த மாதம் ஒரத்தநாடு கடைத்தெருவில் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்தார்.

ஒரத்தநாடு பி.எட் காலேஜ் அருகே தமிழ்செல்வி சென்றுக் கொண்டிருந்தபோது, அதே சாலையில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் திடீரென தமிழ்ச்செல்வியை தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்புடைய நபர்களை தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இந்த திருட்டு சம்பவத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா சொந்தத்தேவன் காடு கிராமத்தைச் சேர்ந்த வீரமணி வயது 25 மற்றும் அவரது கூட்டாளி நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுக்கா கோவில் குளம் ஆயக்கார குளம் பகுதியைச் சேர்ந்த வீரசேகர் 25, பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஒரத்தநாடு போலீசார் தொடர்புடைய இரண்டு வாலிபர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி அவர்களிடமிருந்து சுமார் 8:30 பவன் தங்க நகை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த நபர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியிலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததால், அவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.