கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேருக்கு 19-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது..!

கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விமான நிலையம் பின்புறம் உள்ள காலி இடத்தில் தனியார் கல்லூரியின் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி அவரது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மூன்று பேர் அவர்களை தாக்கி அந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் குணா என்கிற தவசி,சதீஷ் என்கிற கருப்பசாமி,கார்த்திக் என்கிற காளீஸ்வரன் ஆகிய மூன்று பேரை திங்கட்கிழமை இரவு காவல்துறையினரால் சுட்டுப் பிடித்தனர்.அதனை தொடர்ந்து இந்த மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது பிரிவுக்கு மூன்று பேரை மாற்றினர். கோவை அரசு மருத்துவமனையில் கோவை வடக்கு கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் விசாரணை நடத்திச் சென்றார்.

அதனைத் தொடர்ந்து கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி JM2 அப்துல் ரகுமான் இரவு எட்டு மணி அளவில் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டார்.சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது.இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.













; ?>)
; ?>)
; ?>)