• Thu. Nov 6th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

கோல்ட் வின்ஸ் பகுதியில் மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம்..,

BySeenu

Nov 5, 2025

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. தலைமையில் கோல்ட் வின்ஸ் பகுதியில் இன்று மாலை மனிதசங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலப்பொதுச்செயலாளர் வி.வி.வாசன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்த கொண்ட இந்த போராட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கோரியும், போதைப்பொருள் விற்பனையை தடுக்க கோரியும், கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யபட்டவர்களை தூக்கிலிடக்கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன..

இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அதில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில் இருக்கிறது, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் என தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது, சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தென்னிந்தியாவில் மோசமான மாநிலமாக தமிழகம் இருக்கிறது எனவும், கோவை பாலியல் பிரச்சனை இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு என தெரிவித்தவர், அரசு மற்றும் காவல் துறையின் செயலற்ற தன்மையே இதற்கு காரணம் எனவும், இந்த சம்பவங்களுக்கு அடித்தளம் போதைப்பொருள் நடமாட்டமும், டாஸ்மாக்கும்தான் என குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய ஜி.கே.வாசன் ஒரு புறம் மகளிர் கிரிக்கெட்டில் சாதனையை கொண்டாடும் வேலையில், மற்றொருபுறம் பாலியல் வன்முறை சோதனையையும்,
வேதனையையும் ஏற்படுத்துவதாகவும், இது திராவிட மாடல் அரசின் தோல்வியை காட்டுகிறது என விமர்சித்தார்…

எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிலை மாணவிகளுக்கு ஏற்பட கூடாது என்று உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் எனவும், இதுபோன்ற மிருகத்தனமான செயலில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த அரசு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடையும், அதற்கு அடித்தளமாக மகளிர் , மாணவர்களின் ஓட்டும் அமையும் எனவும் தெரிவித்த ஜி.கே.வாசன் ஒவ்வொரு முறையும் குற்றம் நடந்த பிறகு, முன்னெச்சரிக்கை சரியாக செய்யாமல், அதன் பிறகு குற்றவாளியை கண்டுபிடித்து விட்டோம் என தம்பட்டம் அடைப்பது வேதனையும், வருத்தத்தையும் தருவதாகவும், காவல்துறை கை கட்டப்பட்டுள்ளதற்கு காரணம் அரசுதான் எனவும் குற்றம்சாட்டினார்..

தவெக பொதுக்கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, உங்களுடைய கூட்டணிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழகத்தில் அதிமுக , பாஜக , தமாக கூட்டணி வெற்றி அணியாக , முதன்மை அணியாக இருந்து கொண்டு இருக்கிறது எனவும், ஓரிரு மாதங்களில் எங்களோடு பல கட்சிகள் இந்த கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தவர் ஒத்த கருத்து உடையவர்கள் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு சேர முடிவெடுக்க வேண்டும், குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும் எனவும் , அந்த குறிக்கோளை மக்களிடம் அதிமுக,பாஜக, தமாக கூட்டணி எடுத்துச் செல்கிறது என ஜி.கே.வாசன் பதிலளித்தார் .