போதைப் பொருள்கள் விற்பனை வழக்கில் தொடர்புடைய இரண்டு பேர் சிக்கினார். இருசக்கர வாகனத்தில் சென்ற போது அவர்கள் கீழே விழுந்ததில் கால்கள் முறிந்தன.

கோவை, சரவணம்பட்டி, காட்டூர், ரத்தினபுரி, கோவில்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் போதை பொருட்கள் விற்பனை போன்ற குற்றச்சம்பவங்கள் அதிக அளவில் நடந்தன. இதில் தொடர்பு உடையவர்களை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இதில் குற்றங்களில் ஈடுபட்டது ரவீந்தர் என்ற ரவி மற்றும் அவரது நண்பர் அலன் சாம் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் அவள்கள் இரண்டு பேரும் கோவை, சக்தி சாலையில் கரட்டுமேடு பகுதியில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றனர். அப்பொழுது அவர்கள் இரண்டு பேரும் கீழே விழுந்ததில், வலது கால் மற்றும் வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அறிந்து சரவணம்பட்டி காவல் துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.

விசாரணையில் ரவீந்தர் பல்வேறு வழக்குகளில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தது அங்கு அலன் சாமுடன் பலன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. சிறையில் இருந்து வெளியே வந்ததும், அவர்கள் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. உடனே அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களின் கால்களின் காயம் ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.













; ?>)
; ?>)
; ?>)