கோவையில் தனியார் கல்லூரி மாணவி அவரது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று பேர் அவர்களை தாக்கி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் பரப்பு ஏற்படுத்தி உள்ளது. அந்த கல்லூரி மாணவியும் அவரது ஆண் நண்பரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி பாதிக்கப்பட்ட இருவரையும் சந்தித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள அந்த இளைஞரை சந்தித்து விசாரணை நடத்த வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், பாதிக்கப்பட்ட மாணவியை சந்தித்து என்ன தேவை என்பதை எல்லாம் கேட்டு அறிந்து கொண்டேன் என்றார். தற்பொழுது அவருக்கு பாதுகாப்பும் மனநல ஆலோசனையும் தேவைப்படுகிறது அதையெல்லாம் ஏற்கனவே தந்து வருகிறார்கள் என்று கூறினார்.

அந்தப் பெண்ணிடம் நீண்ட நேரம் பேசி விட்டு வந்தேன் என்றும் காவல்துறை சம்பந்தப்பட்ட அந்த மூன்று பேரையும் பிடித்துள்ளார்கள் தற்பொழுது பாதிக்கப்பட்ட இளைஞரை பார்க்க வந்துள்ளதாக தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை பற்றி நான் எந்த விஷயமும் கூற மாட்டேன் என்றும் இப்போதைக்கு அந்த பெண்ணுக்கு தேவை மருத்துவம் பாதுகாப்பு மனநல ஆலோசனை தான் அதற்காக தான் நான் வந்துள்ளேன் என தெரிவித்தார். பாதிக்கப்பட்ட ஒருவரின் பிரச்சனையை நாம் திரும்பத் திரும்ப கூற முடியாது என்று தெரிவித்தார். அந்தப் பெண் அதிர்ச்சியில் தான் இருக்கிறார் அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு விதமாக தான் உள்ளது என தெரிவித்த அவர் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அதில் மாற்றுக்கருத்தே கிடையாது என தெரிவித்தார். இது ஒரு கொடூர செயல் என்று தான் நான் கருதுவேன் இப்படிப்பட்ட ஆட்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று கேட்கும் பொழுது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
அந்தப் பெண்ணிடம் என்ன நடந்தது என்று முழுமையாக விசாரித்து உள்ளேன் அறிக்கையை தயார் செய்து வைத்துள்ளேன் என்றும் அதை தவிர வேறு எதுவும் கூற முடியாது கடுமையான தண்டனை வழங்கப்படும், முதல்வரும் ஒரு மாத காலத்திற்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்று கூறி உள்ளார் என தெரிவித்தார். தற்பொழுது எல்லாம் இது போன்ற செயல்களுக்கு தண்டனை உடனடியாக வழங்கப்படுகிறது அதேபோன்று கடுமையான தண்டனை இந்த வழக்கிற்கும் வழங்கப்படும் என்றார்.
மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். தற்பொழுது அதிக விழிப்புணர்வு உள்ளதால் பெண்கள் தைரியமாக முன்வந்து அந்த குற்றச்செயல்கள் பற்றி கூறுகிறார்கள், ஆணையம் சார்பாகவும் முடிந்த அளவு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். முன்பெல்லாம் பெண்கள் இது போன்ற விஷயங்களை சொல்வதற்கு பயப்படுவார்கள் தற்பொழுது பெண்கள் தைரியமாக வந்து அவர்களது பிரச்சனைகளை கூறுகிறார்கள் அதற்கான தீர்வுகளும் வருகிறது என தெரிவித்தார்.
தற்பொழுது அனைத்து இடங்களிலும் உதவி எண் இருப்பதினாலும் தங்கக்கூடிய இடங்கள் வசதிகள் என பல்வேறு விஷயங்கள் இருப்பதாலும் தீர்வுகள் இருப்பதாலும் தைரியமாக முன்வந்து பெண்கள் அவர்களது பிரச்சனைகளை கூறுவதாக தெரிவித்தார். மகளிர் ஆணையத்தில் முன்பெல்லாம் மனுக்கள் வராது என தெரிவித்த அவர், ஆனால் தற்பொழுது இந்த இடத்திற்கு சென்றால் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது அதனால் தைரியமாக முன் வருகிறார்கள் என தெரிவித்தார். அதிகமான பெண்கள் ஆணையத்திற்கு வருகிறார்கள் என்றும் அவர்களது பிரச்சனை தீர்த்து வைக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
ஆணையத்திற்கு இது போன்ற மனுக்கள் மட்டும் கிடையாது குடும்ப வன்கொடுமை, வரதட்சணை கொடுமை பாலியல் சீண்டல் போன்ற அனைத்து விதமான மனுக்களும் வருவதாக தெரிவித்தார். இந்த விழிப்புணர்வு 2022ஆம் ஆண்டு இருந்ததை விட 30,40,50 சதவிகிதம் கூட அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

கடும் தண்டனைகள் இருந்தால் குற்றங்கள் குறையும் என்றும் தெரிவித்தார். இந்த வழக்கு பொள்ளாச்சி பாலியல் வழக்கு போன்று விசாரிக்கப்படுமா என்ற கேள்விக்கு எனக்கு தெரிந்து இந்த வழக்கெல்லாம் பேசப்படக்கூடாது ஏனென்றால் ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார் அந்தப் பெண்ணை பற்றி திரும்பத் திரும்ப பேசுவதால் கஷ்டப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார். அந்தப் பெண்களைப் பற்றி அதிகமாக பேசினால் அவர்களது வாழ்க்கையும் பாதிக்கப்படும் என தெரிவித்தார். தற்பொழுது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் நிச்சயமாக நீதி தன் கடமையை செய்யும் என தெரிவித்தார். மகளிர் ஆணையத்துடன் காவல்துறை ஒத்துழைப்பும் மிக நன்றாக உள்ளதாக குறிப்பிட்டார்.
ஜாய் கிறிஸ்டில்டா வழக்கு விசாரணை குறித்தான கேள்விக்கு காவல்துறை கமிஷனருக்கு டைரக்ஷன் பாஸ் செய்துவிட்டேன் அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.













; ?>)
; ?>)
; ?>)