• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

ஜம்மு-காஷ்மீரில் குறைந்தது பயங்கரவாத சம்பவங்கள் – உள்துறை அமைச்சகம்

Byமதி

Dec 15, 2021

ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி வரை 206 பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த உள்துறை இணை அமைசர் நித்யானந்த் ராய், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், எல்லை தாண்டிய ஊடுருவல் முயற்சிகள் குறைந்திருப்பதாகவும் அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

மேலும் 2019 ஆண்டில் 255 பயங்கரவாத சம்பவங்களும், 2020 ஆண்டில் 244 பயங்கரவாத சம்பவங்களும், நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.