கோவை சித்ரா சர்வதேச விமான நிலையம் பின்புறம் காலியிடம் உள்ளது. அப்பகுதியில் நேற்று இரவு 11 மணி அளவில் வினித் என்பவருடன் கல்லூரி மாணவி காரில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்.

அந்த வழியாக வந்த மூன்று பேர் இளைஞர் வினித்தை தாக்கி விட்டு அந்த மாணவியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடினர். படுகாயம் அடைந்த வினித் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அங்கு உடனடியாக சென்ற காவல் துறையினர் மாணவியை தேடினர். அப்பொழுது நிர்வாண நிலையில் மாணவியை மீட்ட காவல் துறையினர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த வினீத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிய மூன்று பேரை பிடிக்க பீளமேடு காவல் துறையினர் தனி படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆண் நண்பருடன் பேசிக் கொண்டு இருந்த கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.













; ?>)
; ?>)
; ?>)