பாரதியார் பல்கலைக் கழகத்தில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தர பதிவாளர் பதவி நியமிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது முழு நேர நிரந்தர பதிவாளராக பேராசிரியர் இரா.ராஜவேல் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தற்போது பதிவாளர் , பல்கலைக் கழக சட்ட விதி மற்றும் முறைமைகள் உயர் கல்வித் துறை கடிதம் எண் 250 படி
மற்றும் துணைவேந்தர் பொறுப்புக் குழுவின் ஆணையின் படி, 3 ஆண்டுகளுக்கும் மேலாக துறைத் தலைவர்களாக பணியாற்றி வந்த பேராசியர்களை சுழற்சி முறையில் மாற்றம் செய்வதால் துறைகளின் வளர்ச்சி பலவகைகளில் மேம்படும் என்பதாலும், 17 துறைகளில் பணி மூப்பு அடிப்படையில் பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்கள் புதிய துறைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்.

இதனை தொடர்ந்து இனிவரும் காலங்களில் பல்கலைக் கழகத் துறைகளில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் துறைத் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது…













; ?>)
; ?>)
; ?>)