விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட மாயூரநாதர் சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்.22–ஆம் தேதி தொடங்கியது.

பின்னர் தினமும் மாலையில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் கோவில் முன்பாக திங்கட்கிழமை (நேற்று) மாலை நடைபெற்றது. பின்னர் வள்ளி தெய்வானை திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று மாலையில் யாகசாலை உடன் பூஜை தொடங்கியது. பின்னர் முருகன் வள்ளி தெய்வானை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாணம் நடைபெற்றது திருக்கல்யாணத்தை கோவில் பட்டர் கார்த்திக் நடத்தி வைத்தார் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி முருகன், வள்ளி,தெய்வானை காட்சி அளித்தனர்.

விழாவில் இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணம் முடிந்த பின்பு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜேஷ் தலைமையில் RS. மோகன் . R.N. மணிகண்டன். R. சண்முகவேல். P. சக்திசரவணன் . G.சுரேஷ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.













; ?>)
; ?>)
; ?>)