திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மார்கெட் பகுதியை சேர்ந்த இசக்கி பாண்டி வழக்கறிஞர் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சஸ்மிதாவை காதலித்து வந்துள்ளனர் இந்நிலையில் லண்டனில் படித்து வந்த சஸ்மிதா இசக்கி பாண்டியை திருமணம் செய்து கொள்ள கோவை வருகை புரிந்துள்ளார்.

இருவரும் உக்கடம் பகுதியில் உள்ள சௌடேஸ்வரி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் கோவையில் திருமணம் பதிவு செய்ய முயற்சித்துள்ளனர். இதன் தொடர்பாக வழக்கறிஞரை அணுகிய நிலையில் பெண் வீட்டு தரப்பினர் இருவரையும் பிரித்து அழைத்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் பாதுகாப்பு கோரி கோவை கமிஷனர் அலுவககத்துக்கு சென்ற நிலையில் இருவரையும் பந்தயசாலை காவல்நிலையம் அனுப்பி விட்ட நிலையில் காவல்நிலையத்தில் ரெஜிஸ்டர் அலுவலகம் செல்ல பாதுகாப்பு கோரிய நிலையில் இருவரையும் வெளியே விடாமல் காவல்துறையினர் காவல்நிலையத்தில் முடக்கிவைத்துள்ளனர் .

வெளியே வர முயன்றவர்களையும் காவல்துறையினர் தடுத்து உள்ளே அழைத்து சென்றனர். இதனால் காவல்துறையினர் பெண் வீட்டார் செல்வாக்கு உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியுள்ள திருமணம் செய்து கொண்ட பாண்டியின் சித்தப்பா எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி மணமக்களை சேர்த்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.














; ?>)
; ?>)
; ?>)