• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சக்தியிடம் வேல் வாங்கும் வேல் பூஜை நிகழ்ச்சி..,

திருவோணம் அருகே உள்ள காட்டாத்தி சித்தன் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமயிலைவேல்முருகன் கோவிலில் கந்த சஷ்டி 5ம் நாள் நிகழ்ச்சியாக சக்தியிடம் வேல் வாங்கும் வேல் பூஜை நிகழ்ச்சி சிறப்பா நடைபெற்றது.

இதில் அருள் நிறை முத்துக்குமார, சுவாமிகள் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் 108 வேல் போற்றி கோமாதா போற்றி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று மயிலைவேல் முருகன் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், திரவிய பொடி உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டு ஏராளமான முருக பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

மேலும் விசுவ இந்து பரிசத் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட சாதுக்கள் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் (காரியாவிடுதி) திருவோணம் விசுவ இந்து ஒன்றிய செயலாளர் அன்பழகன், தென் கையிலாக பக்தி பேரவை கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் மதியழகன், உள்ளிட்ட பக்தர்கள் சிவனடியார்கள் கலந்து கொண்டு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினர். வேல் பூஜை, சூரசம்ஹாரம், நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மேலும் நாளை திருக்கல்யாணம் நடைபெறுகிறது,

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊரணிபுரம் சிவனடியார் அறக்கட்டளை வழிகாட்டும் சித்தர் கல்யாணசுந்தரம், மற்றும் சிவனடியார்கள் கிராமத்தார்கள் சிறப்பாக செய்திருந்தனர்,