திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு எல்லையில் அமைந்துள்ள பச்சைமலை, இயற்கை அழகும் பசுமையும் சூழ்ந்த இடமாக திகழ்கிறது. மலைப்பகுதியில் அமைந்துள்ள அருவிகள் சுற்றுலா பயணிகளின் மனதை கவர்கின்றன.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக வனத்துறை சார்பில் மங்களம் அருவியில் சுமார் ₹10 லட்சம் மதிப்பில் இரும்பால் ஆன பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் பெய்த சாதாரண மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த தடுப்பு நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதனால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட தடுப்பு முழுமையாக சேதமடைந்துள்ளது. மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட இந்த திட்டம் சில நாட்களிலேயே கரைந்துபோனதால், பொது நிதி வீணாகி விட்டது என்று சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும், காட்டாற்றில் வெள்ளம் ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொள்ளாமல், திட்டமிடல் குறைவாகவே பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், வனத்துறை அலட்சியம் காரணமாக மக்கள் பணம் வீணாகிவிட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, மீண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமா என்பது குறித்து பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)