விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள வல்லம்பட்டி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வரும் நிலையில் தற்பொழுது பட்டாசு தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இக்கிராமத்தில் கடந்த பல மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்க கோரியும் கிராம நிர்வாகத்தை கண்டித்தும் காலி குடங்களுடன் வல்லம்பட்டி சாத்தூர் செல்லும் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி நிர்வாகம் மற்றும் ஏழாயிரம்பண்ணை சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.













; ?>)
; ?>)
; ?>)