பழனி கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா நடப்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவினை முன்னிட்டு, அக்.27ல் சூரசம்ஹாரம். அன்று மலைக்கோயிலில் அதிகாலை 4.00 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 4.30 மணிக்கு விளாபூஜையும் நடைபெறும். உச்சிக்காலபூஜை நண்பகல் 12.00 மணிக்கும் அதனைத்தொடர்ந்து 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும்.

அதன்பிறகு 3.00 மணிக்கு பராசக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சிக்கு பின் சன்னதி திருக்காப்பிடப்படும். சுவாமி புறப்பட்டு கிரிவீதி வந்து மாலை 6.00 மணிக்கு மேல் கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெறும். சுவாமி மலைக்கோயிலுக்கு திரும்ப வந்தவுடன் திருக்கோயில் வழக்கப்படி உரிய ஸ்ம்ப்ரோசண பூஜைகள் நடைபெற்று இராக்கால பூஜை நடைபெறும்.
சூரசம்ஹாரம் நிகழ்வினை முன்னிட்டு, அக்.27அன்று காலை அனைத்து கட்டணச்சீட்டுக்களும் நிறுத்தப்படும். படிப்பாதை, வின்ச் மற்றும் ரோப்காரில் வரும் பக்தர்கள் காலை 11.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது. என்ற விபரம் பக்தர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. 28.10.2025 முதல் தொடர்ந்து வழக்கம் போல் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.













; ?>)
; ?>)
; ?>)