தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 2,000 கிலோ எடையுள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் ஏ.எஸ்.பி., மதன் உத்தரவின் பேரில், தலைமைக் காவலர் முத்துசாமி தலைமையிலான போலீசார் இன்று காலை 5 மணியளவில் ரோச் பூங்கா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்திலிருந்து பீடி இலை பண்டல்களை பைபர் படகில் சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

போலீசாரைக் கண்டதும் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து கரையில் நின்று கொண்டிருந்த வாகனத்தில் இருந்த 2ஆயிரம் கிலோ பீடி இலைகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் சரக்கு வாகனம், 4 மோட்டார் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)