நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம் கோனேரிப்பட்டி பிரித்துவிநகரில் பல ஆண்டுகளாக சாலை அமைக்காமல் பழுதடைந்துள்ள சாலை பொதுமக்கள் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஊராட்சியை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் நாமக்கல் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒன்றிய அலுவலர் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சந்தித்து உடனடியாக சாலையை அமைத்து தருவதாகவும் துரிதமாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி சரி செய்யுமாறு உத்தரவிட்டார். இதை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)