சாமித்தோப்பு ஆர்ஏஎஸ் மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் தாமரைபாரதி திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்களுடன் இணைந்து பார்வையிட்டார்.

பொது மக்களுக்காக அரசு கொண்டுவரும் சேவைகளை சிறப்பாக செயல்படுத்தும் அரசு அலுவலர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது திமுக மாவட்ட பிரதிநிதி தனசம்பத், மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துசாமி, நிர்வாகிகள் மகேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மழை தொடரும் நிலையில் காலை நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இல்லாது, இருந்தாலும் மாலை 5_மணிவரை இந்த முகாம் நடப்பதால் பெரும் பகுதி மக்கள் பங்கேற்று, அவர்களது தேவையான கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுப்பார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள்.