சுசீந்திரம் பறவைகள் சரணாலய குளத்தில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பாக அபிவிருத்தி பணிகள் நடைப்பெற்று வருவதினையும் தெருவிளக்குகள் பயன்பாட்டினையும் மேயரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மின் விளக்குகள் அதிகமாக பயன்படுத்த வேண்டிய இடங்களையும் கண்டறிந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மின் விளக்குகள் அதிகமாக பயன்படுத்திடவும் காலதாமதமின்றி பணிகள் நிறைவு செய்திடவும் அறிவுறுத்தினார். உடன் உதவி செயற்பொறியாளர் ரகு ராமன்,இளநிலை பொறியாளர் திருமதி.தேவி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இந்த ஆய்வின் போது மேயர் மகேஷ் உடன் இருந்தனர்.
