மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் மேடைப்பேச்சு, ஆளுமை திறன் -மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்கம் தொடக்க விழா நடைபெற்றது. உலக தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் பர்வீன் சுல்தானா வரவேற்புரையாற்றினார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையேற்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார். சொற்பொழிவாளர் சுகி.சிவம் விழாப் பேருரை வழங்கினார் மற்றும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி கலந்து கொண்டார்.

மதுரையில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்து இளம் மாணவர்களின் மனங்களில் தமிழ் உணர்வினை வளர்க்கும் மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியைப் பாராட்டும் விதமாக தலைமையாசிரியர் ஷேக் நபி க்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.