• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

கடந்த 7 ஆண்டுகளில் குடியுரிமையை கைவிட்ட 8.5 லட்சம் இந்தியர்கள்

கடந்த 7 ஆண்டுகளில் எட்டரை லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் வரை 6 லட்சத்து 8 ஆயிரம் பேர் குடியுரிமையை கைவிட்ட நிலையில், கடந்த ஓராண்டில் மேலும் ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் குடியுரிமையை விட்டுள்ளனர். இந்தியாவில் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தவர்களில் பாகிஸ்தான் முதலிடமும், ஆப்கான் இரண்டாம் இடமும் வகிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.