கோவை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, பந்தய சாலை பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

கோவை விமான நிலைய அதிகாரிகளின் மின்னஞ்சல்களுக்கு விமான நிலையம் மற்றும் பந்தய சாலை பகுதிகளுக்கு மிரட்டல் வந்தது.

சோதனைகளின் போது எந்த சந்தேகப் பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மிரட்டல் விடுத்த மின்னஞ்சல் தொடர்பாகவும், மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்..