தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மற்றும் தெருக்களில் மழை நீர் சூழ்ந்து பழமையான வீடுகள் இடிந்து விழுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதனால் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் இயற்கை பேரிடர் தொடர்பாக மழை பாதிப்புகளில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண் வெளியிட்டுள்ளது
தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் அந்தந்த பகுதி வட்டாட்சியர்களுக்கு உத்தரவிட்டு பொதுமக்களுக்கு மழைக்கால 24 மணி நேர அவசர உதவி எண்களையும் வெளியிட்டுள்ளனர். பெரியகுளம், உத்தமபாளையம், தேனி, ஆண்டிபட்டி உள்ளிட்ட தாலுகா வாரியாக மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க உதவி எண் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பதிப்புகள் குறித்து 04546 – 261096 என்ற தொலைபேசி எண் மற்றும் 9487771077 என்ற வாட்ஸ் ஆப் எண் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மழை பாதிப்புகள் தொடர்பான புகார்களுக்கு அந்தந்த தாலுகா வாரியாக கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்கள் புகாரை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.