தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற கோரிக்கையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளையும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
“ரத்து செய் ரத்து செய்”

“புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்” என்று கோஷங்களை எழுப்பி தமிழக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றன இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.