தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை மிக தீவிரமடைகிறது வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை

குமரி கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சாதகமான சூழல் நிலவுகிறது. இன்று தென் மாவட்டங்களான நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி இராமநாதபுரம் ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மிக கனமழை பெய்யும். தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு
தென் கடலோர மாவட்டங்களை ஒட்டிய விருதுநகர் மதுரை மாவட்டங்களிலும் இன்று நல்ல மழை பெய்யும்.
