அரியலூர் ஒன்றியம் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவரும் இந்திய ஏவுகணை விஞ்ஞானிகமான டாக்டர் ஏ.பி.ஜெ . அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி, பள்ளி தலைமை ஆசிரியர்
முனைவர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது.

விழாவின் போது மாணவர்களிடம் பேசிய தலைமை ஆசிரியர் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி.ஜெ. அப்துல் கலாம், மாணவர்களுக்கும் கல்விக்கும் ஆற்றிய அர்ப்பணிப்பை போற்றும் வகையில் அவருடைய பிறந்தநாள் விழா உலக மாணவர் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு
வருகிறது.
நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மற்றும் மாற்றி அமைக்கும் வல்லமை மாணவர்களிடம் மட்டுமே இருக்கிறது என்று மாணவர்கள் மீது அசாத்திய நம்பிக்கை வைத்தார். உலகில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு மாணவர்களும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்று விரும்பினார்.

கல்வியும் அறிவியல் கண்டுபிடிப்பும் மட்டுமே இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்ற உதவும் என்றார் எனவே அவரின் கூற்றை நிருபிக்கும் வகையில் ஒவ்வொரு மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, செந்தில்குமரன், வெங்கடேசன், அந்தோணிடேவிட், அபிராமி , பயிற்சி ஆசிரியர்கள் காஞ்சனா, கார்த்திகா மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் , தலைமையாசிரியர் சின்னதுரை தலைமையில் அப்துல் கலாம் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.