விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு செவ்வாய்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது .திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பழைய ஏழாயிரம்பண்ணை காமாட்சி அம்மன் கோவில், சங்கரபாண்டியாபுரம் காளியம்மன் கோவில், மடத்துப்பட்டி காளியம்மன் கோவில், உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.