கோவை, மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது. அ.தி.மு.க, தி.மு.க மாமன்ற உறுப்பினர்கள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

அண்மையில் கோவை அவிநாசி சாலையில் ஜி.டி நாயுடு மேம்பாலம் திறக்கப்பட்டது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதிற்காக சிறப்பு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்ட போது, அ.தி.மு.க மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் இந்த திட்டத்தை கொண்டு வந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது தி.மு.க மாமன்ற உறுப்பினர் ஒரு சேர ஒன்றிணைந்து அ.தி.மு.க மாமன்ற உறுப்பினர் பிரபாகரனிடம் வாக்குவாதத்தில் ஈடப்ட்டனர் . இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் எழுந்து உள்ளது .
பின்னர் சிறப்பு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி வாழ்க என கோஷமிட்ட படியே அ.தி.மு.க உறுப்பினர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரபாகரன்
மேயர் பல்வேறு கட்ட முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதாக குற்றம் சாட்டிய அவர் , 103 தீர்மானஙக்ளில் 55 தீர்மான்ங்களுக்கு முன் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் கையூட்டு நடைபெற்று இருக்க கூடும் எனவே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.