• Fri. Jan 30th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இந்த வருடத்தில் கஞ்சா வழக்குகளில் 407 குற்றவாளிகள் கைது..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 200 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

▫️ இதில் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் சிவ பிரசாத் (24)

நாகர்கோயில் பகுதியை சேர்ந்த பெல்வின் விஜி என்பவரது மகன் எல்பின் ஜோஸ்வா (28) மற்றும் கணேசன் என்பவரது மகன் மகேஷ் (37).,

நாகர்கோயில் மதுவிலக்கு ஆய்வாளர் திருமதி. ஜானகி அவர்கள் மேற்படி மூவரையும் கைது செய்தார்.