கோவை புலியகுளம் பகுதியில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் ,”தாய்மை” என்ற பெயரில் நடைபெற்றது. இந்த திட்டத்தை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர்,
இன்று கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்காக , அவர்களது உடல் நலமுடன் நலன் சார்ந்து விழிப்புணர்வு பயிற்சியும் அவர்களுக்கான ஊட்டச்சத்து வழங்குகின்ற தாய்மை என்கின்ற ஒரு புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறோம் என்றார்.தமிழகத்தை பொறுத்தவரை ஒருபுறம் திராவிட மாடல் ஆட்சி சமூக நீதி , சமத்துவம், பெண்ணுரிமை என்றெல்லாம் சொல்லி கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கான மத்திய அரசு திட்டங்களுக்கு கூட சரியான நிதி உதவியை பயன்படுத்தாமல் இருப்பது,பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் என பெண்ணுரிமை பேசும் திராவிடம் மாடல் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கிறது என குற்றம் சாட்டினார்.

திராவிட மாடல் ஆட்சி என்பது முழுவதுமாக பெண்களுக்கு எதிரான மாடலாக இருக்கிறது எனவும், குடும்பத்தில் கூட ஆண் வாரிசுகளுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் பெண்களுக்கு கொடுக்காதது தான் திராவிட மாடல் அரசாக பார்க்கிறோம் என தெரிவித்தார்.ஒவ்வொரு துறையிலும் திட்டங்களை அறிவிக்கும் போது ஒரு அறிவிப்பு அதனை செயல்படுத்துகின்ற போது முற்றிலும் அதற்கு மாறாக நடந்து கொள்வது,தேர்தல் வாக்குறுதியில் ஒன்று கொடுப்பது, ஆனால் தேர்தல் நெருங்கும் போது வேறு ஒன்று பேசுவது, இடையில் தேர்தல் வாக்குறுதிகளுக்காக போராடக் கூடிய நபர்களைக் கூட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்குவது என மக்களுக்கு எதிரான அரசாக திராவிட மாடல் அரசு அரசு இருக்கிறது எனவும் விமர்சித்தார்.தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்று யாத்திரையை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் துவங்கியிருக்கிறார். இந்த பயணம் என்பது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல போகிறது எனவும்,திராவிட மாடல் அரசு ஏன் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது பற்றி மக்களுக்கு ஒவ்வொரு வீடுகளுக்கும் எடுத்து செல்கின்ற வகையில் இந்த பயணம் அமையும் எனவும் குறிப்பிட்டார்.தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில், பெண்களுக்கு விடுபட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கப் போகிறோம் என துணை முதலமைச்சர் உதயநிதி சொல்லி இருப்பதாகவும் இத்தனை ஆண்டுகளாக கொடுக்காமல் தேர்தல் வருகின்ற பொழுது கொடுக்கின்றனர் எனவும் மக்களை ஏமாற்றுகின்ற டிராமா வேலையை செய்து கொண்டிருக்கின்றனர் எனவும் மக்களும் இந்த அரசு போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டனர் எனவும் கூறினார்.அதிமுக – பாஜக மற்றும் எங்களோடு இணைந்திருக்கின்ற அத்தனை கட்சிகளும் இந்த பிரச்சார பயணத்தை மக்களிடம் எடுத்து செல்வதாகவும்,வெற்றி என்பது 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.உச்ச நீதிமன்றம் கரூர் வழக்கினை சிபிஐ விசாரணைக்கு வழங்கி உத்தரவிட்டதை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் நாங்களும் இதை எங்களின் கோரிக்கையாக வைத்திருந்தோம் என கூறியதுடன்,கரூரில் நடந்ததை விபத்து என ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி பேசும்பொழுது நடந்ததாக கூறப்படும் பல்வேறு விஷயங்கள் மிகப்பெரிய சந்தேகத்தை மாநில அரசின் மீது உருவாக்கி இருக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்.அரசாங்கத்தின் சார்பில் ஏற்படுத்தியிருக்கிற ஒரு நபர் கமிஷன் மீது நம்பிக்கை இல்லை என்பதை எங்கள் மாநில தலைவர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் சிறப்பு விசாரணை குழுவை எதிர்த்து தவெக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இன்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கின்றார்கள் எனவும் இது தமிழக காவல்துறை முழுவதுமாக தோல்வி அடைந்திருக்கிறது என்பதை காட்டுகிறது எனவும், தமிழக காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த தீர்ப்பு ஒரு அடியை கொடுத்து இருக்கிறது எனவும் விமர்சித்த அவர்,தமிழக காவல்துறையின் மீதான நம்பிக்கை என்பது தமிழக மக்களுக்கு சிறிது சிறிதாக குறைந்து கொண்டிருப்பதாகவும் அவர்களுடைய முழு திறன் முழு சுதந்திரம் என்பது இல்லை என்பதற்கு இந்த திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு நூற்றுக்கணக்கான சம்பவங்களை சொல்ல முடியும் என்றும் சிபிஐ விசாரணை மூலம் உண்மை வெளி கொண்டு வரப்படும் சம்பவத்திற்கு காரணமானவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அதிகாரத்திற்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் மக்கள் முன்பாக நிறுத்தப்படுவார்கள் என்பது உண்மை எனவும் தெரிவித்தார்.கரூர் ஒரு இறுக்கமான இடமாக நாங்கள் போகும்போது உணர முடிந்தது எனவும் அங்கு அரசியல் அதிகாரம் என்பதை தாண்டி அந்த மாவட்டத்திற்குள் மட்டும் உள்ளூரில் இருக்கக்கூடிய சாதாரணமான பஞ்சாயத்து தலைவர்கள் அல்லது வார்டு உறுப்பினர்கள் வேறு ஒரு கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கடந்த நான்கு வருட காலத்தில் எத்தனை பேர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாறி இருக்கிறார்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பதைப் பற்றி பார்க்க வேண்டும் எனவும் ஒரு அறிக்கையையே உருவாக்க முடியும் எனவும் எந்த அளவிற்கு ஆளும் கட்சி குறிப்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அதிகாரத்தின் பிடி, நெருக்குதல் தாங்க முடியாமல் எத்தனை பேர் கட்சி மாறி இருக்கிறார்கள் என்பதை பற்றியும் நாம் பேசியாக வேண்டும், இயல்பான சூழல் கரூரில் இல்லை எனவும் கடும் விமர்சனத்தை முன் வைத்தார்.இதே போல் எந்த ஒரு சட்ட திட்டத்திற்கும் உட்பட்ட மாவட்டமாக கரூர் இல்லை எனவும் திமுக ஆட்சி எப்போது எல்லாம் வருகிறதோ அப்போது ரௌடிகள் ராஜ்ஜியம் நடக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.ஆர் எஸ் எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கைப்பாவை சிபிஐ என விஜய் ஏற்கனவே தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், உச்சநீதி மன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அதில் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்கிறது எனவும் உச்ச நீதிமன்றத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இருக்கிறது அல்லவா அவர் அதை ஃபாலோ பண்ணட்டும் என்றார்.சிபிஐ மூலமாக தவெக விஜயை பாஜக கன்ட்ரோலில் எடுக்கின்றதா என்ற கேள்விக்கு , இதற்கு விஜய் தான் பதில் சொல்ல வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் பதில் அளித்தார். சிபிஐ கன்விக்சன் ரேட் என்பது அந்தந்த வழக்கு விசாரணையை பொறுத்தது எனவும், நீதிமன்றத்தில் ஒரு மேற்பார்வையின் கீழ் நடக்கின்றது எனவும் இதை தாண்டி என்ன செய்ய முடியும் எனவும் தெரிவித்தார். சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து விரைவாக நீதி கிடைப்பதற்கு விஜய் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை எனவும் தெரிவித்தார்.கரூர் விவகாரத்தில் உயிரிழந்த நபர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நாங்கள் பார்க்கிறோம் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பதை அரசியலாக பார்த்தால் பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் ஒரு ஜனநாயக அமைப்பில் கட்சி துவங்குவதற்கும், கட்சி செயல்படுவதற்கும் எல்லாருக்கும் உரிமை உண்டு நெருக்குதல்களை சந்திக்கும் பொழுதும், அவர்கள் நெருக்கடியை தாண்டி பிரச்சனை வரும் பொழுதும் அதன் தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் இப்படி ஒரு சூழல் தமிழகத்தில் இருக்கின்றது என்ற எதார்த்தத்தை பார்க்க பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.ஒரு கூட்டத்தில் கொடுக்க வேண்டிய பாதுகாப்புகளை அரசு கொடுக்காமல் விட்டதால் இது போன்ற விஷயங்கள் நடக்கிறது எனவும் குறிப்பிட்டார்.தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரைச் சொல்லாமல் அதிமுக பாஜக கூட்டணி என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவதும், நைனார் நாகேந்திரன் பிரச்சார பயணத்தில் கலந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிச்சாமி இருந்தது குறித்த கேள்விக்கு, அதிமுகவில் இருந்து தலைவர்கள் கலந்து கொண்டார்கள் எனவும் எடப்பாடி பழனிச்சாமியும் தனியாக பிரச்சாரத்தில் இருக்கின்றார் எனவும் இதைப்பற்றி கவலைப்பட வேண்டியது நாங்கள் , நீங்கள் ஏன் கவலைப்படுகின்றீர்கள் எனவும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார். மதுரையைச் சேர்ந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டதாகவும் அவர்கள் தொடர்ந்து ஜெயித்து வருபவர்கள் எனவும் நகைப்புடன் கூறினார்.தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு, எல்லா நிகழ்ச்சிகளிலும் எல்லாராலும் கலந்து கொள்ள முடியாது எனவும், நீங்கள் எப்படியாவது அவர் வரவில்லை இவர் வரவில்லை என்று சொல்லக்கூடாது

தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது இன்னும் ஸ்ட்ராங்கான ஆட்கள் வரப்போகிறார்கள் எனவும் சூசகமாக தெரிவித்தார்.தொடர்ந்து ட்ராங்கான ஆட்கள் என்றால் அது விஜய்யா என்ற கேள்விக்கு,நீங்கள் ஸ்ட்ராங்கான ஆள் என்று யாரை நினைக்கிறீர்களோ அவர்களை வைத்துக் கொள்ளுங்கள் எனவும் வானதி சீனிவாசன் பதில் அளித்தார். நீங்கள் வீசிய வலை விஜய்க்கா என்ற கேள்விக்கு , நாங்கள் வலை எல்லாம் விசுவதில்லை எனவும் சிரித்தபடி பதில் அளித்தார்.தவெக வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் குறித்து பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கிறது, அதை நான் வழக்கறிஞர் என்ற முறையில் எப்படி பார்க்கிறேன் என்றால் உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் மாற்றும் பொழுது நீதித்துறை அதிகாரத்தின் படி தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கின்றதா எனபார்க்க வேண்டும், பர்சனல் ஆக சென்று பார்க்கத் தேவையில்லை என்றார்.
கட்சிக்கொடி போட்டு விட்டோம் என்று சொன்னால் சாதாரண மக்களை விட உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என யாரும் நினைக்க கூடாது எனவும் திருமாவளவன் விஷயத்தில் அவருடன் வந்தவர்கள் மற்றும் திருமாவளவன் ஆகியோர் உடல் மொழியும் ஒரு தலைவருக்குரியதாக இல்லை என்றும் ஒரு தனிநபரை இப்படித்தான் கையாள்வீர்களா எனவும் அந்த சம்பவம் அதிர்ச்சிகரமான ஒன்றாக இருந்தது என்றும் ஒரு தனி நபரை இத்தனை பேர் சேர்ந்து மிரட்டுவது , சாதாரண செயலை அரசியலாக மாற்ற முயல்வது என்ற இந்த மனப்போக்கே ஆபத்தான மனப்போக்கு எனவும் குற்றம்சாட்டினார்.மேலும் கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் மக்களை சந்திப்பதற்கு மண்டபங்கள் யாரும் கொடுக்க முன் வராமல் இருப்பது குறித்த கேள்விக்கு, எங்களுடைய பொதுவான நிகழ்ச்சிகளுக்கு வரக்கூடிய தலைவர்கள் தொழிலதிபர்கள் ,கல்லூரியை நடத்துபவர்கள், போன்றவர்களை கூட திமுகவினர் மிரட்டுகின்றனர் இதை ஓபன் ஆக சொல்ல முடியாது எனவும், அதிகார மமதையின் உச்சத்தில் திமுக இருக்கிறது எனவும், மண்டபத்தை கொடுக்கவில்லை என்று சொல்வது எல்லாம் ஆச்சரியமில்லை , அது எல்லா இடத்திலும் நடக்கிறது எனவும் தெரிவித்தார்.இதேபோல் துணை முதல்வர் உதயநிதி காலில் வயதானவர்கள் விழுவது சுயமரியாதைக்கு இழுக்கு எனவும், சுயமரியாதை என்ற பெயரை வைத்துக் கொண்டு தமிழக மக்களை அடிமைப்படுத்தும் செயலை திமுக செய்து கொண்டு இருக்கிறது எனவும் வானதி சீனிவாசன் கூறவே,அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா காலிலும் விழுந்தார்களே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ஒரு தலைவரை மரியாதை நிமித்தமாக நடத்துவது என்பது வேறு உதயநிதி காலில் பெரியவர் விழும் போது பதற வேண்டாமா எனவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் ஜெ காலில் விழுந்தது ஏற்றுக் கொள்ளக் கூடியதா, சசிகலா காலில் விழுந்தது ஏற்று கொள்ள தக்கதா என்ற கேள்விக்கு, நீங்கள் இப்போது என்ன செய்யனும்ன்னு நினைக்குறீங்க என சிரித்தபடி பதில் அளித்தார். நாங்கள் 15 வயது சன்னியாசி காலில் கூட விழுவோம் அது மரியாதை எனவும் , யார் காலில் யார் விழுகிறார் என்பதுதான் முக்கியம் எனவும் விளக்கமளித்தார்.மேலும் அண்ணாமலையின் பயணத்திற்கு போட்டியாக நயினார் நாகேந்திரனின் பயணம் திட்டமிடப்பட்டதா என்ற கேள்விக்கு, இது கட்சியின் வேலை எனவும் எந்த தலைவர் வந்தாலும் இதுபோன்று நடக்கும் எனவும் தெரிவித்தார். இது ரோட் ஷோவாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவு எனவும் காலையில் மக்களை சந்திப்பது மாலையில் பொதுக்கூட்டம் எனவும் குறிப்பிட்டார்.நயினார் நாகேந்திரன் பிரச்சார பயணத்திற்கு தேசிய தலைவர்கள் யாரும் வராதது குறித்த கேள்விக்கு, தேசியத் தலைவர்கள் பீகார் தேர்தலில் கவனம் செலுத்தி கொண்டு இருக்கின்றனர் என்பதால் வர இயலவில்லை எனவும் தேசிய கட்சி என்பதால் பல மாநிலங்களையும் பார்க்க வேண்டி இருக்கிறது எனவும் தெரிவித்தார்.கோவை உப்பிலிபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்திருக்கிறது, காவல்துறையினர் இதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தமிழகத்தின் நீண்ட பாலம் இங்கு அமைந்திருப்பது நமக்கு பெருமை எனவும் இதில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என கூறியதுடன்,பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயர் வைக்கப்பட்டு இருப்பதை பாரதிய ஜனதா கட்சி வரவேற்கிறது எனவும் இதில் சாதி பெயர் வந்திருக்கின்றது என்பது சரியா தவறா என்றால் இதற்கு அரசாணை வெளியிட்டவர்களிடம் தான் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.இதேபோல் ஜாதிப் பெயரில் ஊர் பெயர் தெரு பெயர் இருக்கக் கூடாது என்றால் கோவையில் நிறைய ஊர் பெயர்கள் பாதிக்கப்படுமே என்ற கேள்விக்கு கோவையில் நிறைய ஊர்களுக்கு பெயரே இருக்காது எனவும் இனிமேல் ஊர்களுக்கு இன்சியல் போட்டுத்தான் கூப்பிட வேண்டும் எனவும் இது அரைகுறை அரசு அப்படித்தான் இருக்கும் எனவும் ஏளனம் கூறினார்.
பின்னர் மீண்டும் மைக் முன்பு அமர்ந்த வானதி சீனிவாசன், நாளை சட்டப்பேரவை நடக்க இருக்கிறது, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இதுகுறித்து பேசி நாளை சட்டமன்றத்தில் என்ன பேசுவது , எப்படி செயல்படுவது என்பது குறித்து முடிவு செய்வார்கள் என்றும் சட்டப்பேரவையில் செயல்படுவது என்பது கூட்டணி முடிவாக இருக்கும், அதிமுகவும் பாஜகவும் ஒன்றாக இருக்கிறோம் எனவும் தெரிவித்த அவர்,சட்டமன்றத்தில் கரூர் சம்பவம் நிச்சயம் எதிரொலிக்கும் எனவும் தெரிவித்தார்.மேலும் வருகிற 28 ஆம் தேதி துணைக் குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் கோவை வர உள்ளதாகவும் கோவையில் இருக்கக்கூடிய அனைத்து சமுதாயங்கள் மற்றும் அனைத்து அமைப்புகள் இணைந்து மிகப்பெரிய பாராட்டு விழாவை கொடிசியாவில் நடத்த இருப்பதாகவும் நேரம் பின்னர் அறிவிக்கிறோம் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்..