அரியலூர் மேல தெரு பகுதியில் 250 ஆண்டுகளுக்கு மேலாக எழுந்தருளி அருள் பாலித்து கொண்டிருக்கும் பார்வதி தேவியின் சக்தி அம்ச அவதாரமாக விளக்கும் அருள்மிகு ஸ்ரீ படைப்பத்து மாரியம்மனுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு கோவிலின் குடமுழுக்கு (கும்பாபிஷேக) விழா 04.09.2025 சிறப்பாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து தினம்தோறும் படை பத்து மாரியம்மனுக்கு பூஜைகள்,சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு, மண்டல பூஜையின் நிறைவு நாளான நேற்று, வழக்கறிஞர் அரிமா கோகுல்பாபு பாண்டுரங்கன் குடும்பத்தினரால் மண்டல பூஜை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஸ்ரீ படை பத்து மாரியம்மன் , விநாயகர், முருகன், சிவன் , ராமர்,லட்சுமணன், சீதை, வராகி, பைரவர், துர்க்கை , நவகிரகம் என அனைத்து சாமிகளுக்கும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள்,அலங்காரங்கள், பூஜை நடைபெற்றது.

மண்டல பூஜை நிறைவு விழாவில் ஸ்ரீ படை பத்து மாரியம்மன் கோவில் நிர்வாக தலைவர் வெங்கடேசன், செயலாளர் GDR டில்லி ராஜ் , பொருளாளர் நடேசன் , சண்முக ஜுவல்லர்ஸ் ஆர் .கணேசன் , பா.ஜ.க முன்னாள் மாவட்ட தலைவர் அய்யப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மண்டல பூஜை நிறைவு விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்து, பங்கேற்ற அனைவருக்கும் பாஜக மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் அரிமா பா .கோகுல் பாபு நன்றி கூறினார் .