தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு முழுவதும் நேதாஜி சுபாஷ் சேனை அறிவிப்பு எதிரொலியாக காவல்துறை அத்துமீறல்களுக்கெதிராக ஒட்டு மொத்தமாக கடைகளை அடைத்து, கறுப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர் எனவும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாம் உளவுத்துறை போலீசார் மத்தியில் விசாரித்த போது ஒருசில சமூக விரோதிகள். காவல்துறை .அதிகாரிகளுக்கு. உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் கைது செய்யக்கோரியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.