விவசாயிகளை பாதுகாக்க நாள்தோறும் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி இருந்து வரும் வேளையில் தமிழ்நாட்டில் இயற்கை அழிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தனியார் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு மையத்தை கந்தர்வகோட்டை பிசானத்தூர் கிராமத்தில் அமைக்க கூடாது. அரசு சிப்காட் பகுதியில் அந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் .

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 500-கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் விவசாயத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கிராம பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள விவசாய நிலத்தின் அருகே தனியார் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைய உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும்
மேலும் இந்த மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையால் விவசாய நிலங்களில் நிலத்தடி பாதிக்கபட்டு நச்சுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், தனியார் மருத்துவக் கழிவுகளில் இருந்து வெளியேறும் கன உலோகங்கள் மற்றும் இரசாயனங்கள் நிலத்தில் கசிந்து ஐந்து கிலோ மீட்டர் வரை நிலத்தடி நீரில் கலந்து விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் நீரே விஷமாக மாறும் அபாயம் உள்ளதாகவும், விஷமாக மாறும் நீரினால் பயிற்கள் வளர்ச்சி குன்றி மொத்த விவசாயமும் பாழாகும் அபாயம் உள்ளது.
அதே போன்று மருத்துவக் கழிவுகளை எரிக்கும் போது டையாக்ஸின் மற்றும் ஃபியூரான்கள் போன்ற அதிபயங்கரமான நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து பொதுமக்களுக்கு நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் பாதுகாப்பற்ற முறையில் கையாளப்படும் ஊசிகள், தோய்ந்த பஞ்சுகள் போன்ற உயிரியல் மருத்துவ கழிவுகளில், தொற்று நோயை உண்டாக்கும் வைரஸ்கள், திறந்த வெளியில் கொட்டப்படுவதால். ஈக்கள், கொசுக்கள் மற்றும் விலங்குகள் மூலம் கிராம மக்கள் மத்தியில் மிக வேகமாக பரவி சுகாதார நெருக்கடிக்கு வழிவகுக்க வாய்ப்பு உள்ளதாகவும். உடனடியாக இந்த தனியார் உயிரி தனியார் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையத்தின் அப்பகுதியில் அமைக்க கூடாது என்றும். அரசு சிப்காட் மற்றும் சிட்கோ பகுதிகளில் அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளை காக்க நாள்தோறும் விவசாயிகள் நலன்களில் அக்கறை கொண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்ற வேலையில் தமிழ்நாடு அரசு விவசாயிகளை அழிக்கின்ற வகையில் செயல்படுவது வேதனையாக உள்ளது. அதேபோல் இயற்கை வளங்கள் நலத்துறை அமைச்சர் சொந்த மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கையை அழிக்கும் விதமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கும் எண்ணத்துடன் விவசாய நிலத்தில் தனியார் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்க முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. மேலும் இந்த திட்டத்தை அந்தப் பகுதியில் செயல்படுத்த முயற்சித்தால் விவசாயிகளோடு கைகோர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.