தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டம் உட்பட ஆறு மாவட்டங்களில் மட்டும் இன்று போலியோ சொட்டுமருந்து மருத்துவ முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் போலியோ நோயை முற்றிலும் அகற்றும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாம் பிப்ரவரி மாதத்தில் நடை பெற்று வருகிறது.

தற்போது தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டம் உட்பட ஆறு மாவட்டங்களுக்கு மட்டும், இன்று ஞாயிறு கிழமை காலை 7: 00 மணி முதல் மாலை 4:00 வரை போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாம் நடைபெறுகிறது. செங்கல்பட்டு,சிவகங்கை, தஞ்சாவூர்,மயிலாடுதுறை, திருநெல்வேலி,விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மட்டும் போலியோ சொட்டு மருந்து அரசு மருத்துவ கல்லூரிகள், அரசு மருத்துவ மனைகள், மற்றும் பள்ளிகளில், பிறந்த குழந்தை முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

மேலே குறிப்பிட்ட இந்த ஆறு மாவட்டங்களில் மட்டும் போலியோ நோய் கிருமி பரவி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாம் நடைபெறுகிறது