தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 புதிய தாழ்தள பேருந்துகள் மற்றும் 3 வழிதட நீட்டிப்பு பேருந்து சேவைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் இன்று பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலின்படியும், தஞ்சாவூர்-2 கிளை மூலம் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பேருந்தில் ஏறி இறங்கி செல்லும் வகையில் சிறப்பம்சங்கள் நிறைந்த 5 புதிய சொகுசு தாழ்தள பேருந்துகளில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் –புதிய பேருந்து நிலையம் – மெடிக்கல் – பழைய பேருந்து நிலையம் வழித்தடத்தில் 2 புதிய வட்டப்பேருந்துகள், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் – மெடிக்கல் – புதிய பேருந்து நிலையம் – பழைய பேருந்து நிலையம் வழித்தடத்தில் 2 புதிய வட்டப்பேருந்துகள், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் – புதிய பேருந்து நிலையம் வழித்தடத்தில் 1 புதிய பேருந்துகள் இயக்கம் மற்றும் நகர் பேருந்து தடம் எண். B6, D6, A81 மூலம் கரந்தையிலிருந்து மெடிக்கலுக்கு தினசரி 6 நடைகள் தடநீட்டிப்பு செய்தும் மற்றும் தடம் எண். A53, A25 நகர பேருந்துகள் மூலம் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மெடிக்கலுக்கு நடராஜபுரம் காலனி வழியாக தினசரி 4 நடைகள் தடநீட்டிப்பு செய்து இயக்கப்படும் பேருந்து சேவையினை இன்று தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

மேலும், தஞ்சாவூர்-2 கிளை நகர் பேருந்து தடம் எண். A11 தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா நகர் வழியாக தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் மருத்துவக்கல்லூரிக்கு தினசரி 6 நடைகள் தடநீட்டிப்பு செய்து இயக்கப்படும் பேருந்து சேவையினை தஞ்சாவூர் – அண்ணா நகரிலிருந்து மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.தெ.தியாகராஜன் அவர்கள், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ச.முரசொலி அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.துரை.சந்திரசேகரன் அவர்கள் (திருவையாறு), திரு.டி.கே.ஜி.நீலமேகம் அவர்கள் (தஞ்சாவூர்), மாநகராட்சி மேயர் திரு.சண்.இராமநாதன் அவர்கள், துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி அவர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மண்டல பொது மேலாளர் திரு.முத்துக்குமாரசாமி அவர்கள், துணை மேலாளர் (தொழில்நுட்பம்) திரு.K.ராஜசேகரன் அவர்கள், தஞ்சாவூர் -2 கிளை மேலாளர் திரு.M.சந்தானராஜ் சுசியன் அவர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
