அரியலுார் நகராட்சி பேருந்து நிலையம் முன்புள்ள எம்ஜிஆர் , ஜெயலலிதா சிலைகளுக்கு அருகே அதிமுக 54 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மாவட்ட அம்மா பேரவை ஏற்பாட்டில் நடந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி யினை, மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ் ராஜேந்திரன் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

முன்னதாக மாவட்ட அதிமுக செயலாளர் தாமரை எஸ் .இராஜேந்திரன் கட்சியின் முக்கிய நிர்வாகி களுடன்,அதிமுக நிறுவனர் எம்ஜிஆர், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு, ,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொரு ளாளர் அன்பழகன்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஓபி சங்கர், இணை செயலாளர் நா .பிரேம் குமார், துணை செயலாளர் புரட்சி சிவா, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிவசங்கர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜீவா அரங்கநாதன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கல்லங் குறிச்சி சு .பாஸ்கர், மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு செயலாளர் ஓ வெங்கடாஜல பதி,அரியலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பெய்யூர் பாலசுப்பிரமணியம், நகர அவை தலைவர் தளபதி கே.கணேசன், நகரசெயலாளர் ஏபி செந்தில் ,நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் கே கருணாநிதி, நகர அம்மா பேரவை செயலாளர் சாக்கோட்டை கே. விக்கி , நகர அம்மா பேரவை தலைவர் ஆஸ்கார் செந்தில், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
