கரூர் அடுத்த தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் இன்று காலை கூட்டுறவுத்துறை மூலமாக, மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலமாக கூட்டுறவு நிறுவனங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்விற்காக 757 நபர்கள் தேர்வர்களாக விண்ணப்பித்த நிலையில், இன்று 175 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஈரோட்டினை சார்ந்த கர்ப்பினி பெண்மணி ஒருவர் தேர்வு எழுதும் மையம் கேட்டின் முன்பு 9.30 மணிக்கு வந்த நிலையம் வந்தவுடனும் உள்ளே அவரை அனுமதிக்காத நிலையில் அவர் மயக்க நிலையினை அடைந்தார். இதே போல சுமார் 15 நபர்களை அனுமதிக்காத நிலையில் அவதி அடைந்தனர். மேலும், பேருந்து நிலையம் புதிதாக அமைக்கப்பட்டதால் பேருந்து உள்ளே சென்றுவிட்டு வந்ததால், தாமதமானது எனவும் கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர்.
இதுமட்டுமில்லாமல், இந்த தேர்விற்காக கடந்த ஒரு வருடம் காத்திருந்ததாகவும் இனி இது போல அமையாது என்றும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.