திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. பள்ளி தாளாளர் அருட் தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அருட் தந்தை ரூபன் சிறப்புரையாற்றினார். துணை முதல்வர் ஞானசீலா முன்னிலை வகித்தார். போக்சோ குறித்து சந்தியா பிரியதர்ஷினி விளக்க உரையாற்றினார்.

இதில் பள்ளி தாளாளர் அருள் தந்தை சேசு ஆரோக்கியம் பேசியதாவது: திருவள்ளுவரின் கூற்றுப்படி நமக்கு ஆர்வம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்குதான் கற்பித்தல் நடக்கும். அதனால் குழந்தைகளிடம் பள்ளியில் என்ன நடந்தது. யார் என்ன சொல்லித் தந்தார்கள் என்பதை பெற்றோர்கள் ஆர்வமாக கேள்வியாக கேட்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் கற்றிலின் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டு நல்ல தரமான கல்வியை கற்று முன்னேறுவார்கள். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தான் வழி காட்ட வேண்டும். நல்ல கருத்துக்களை நீங்கள் கூற வேண்டும். என்றார்.
இதில் பள்ளி முதல்வர் அருட்தந்தை ரூபன் பேசியதாவது: பழமைகளை நாம் ஒதுக்கிவிட்டு நம் குழந்தைகள் வளர்ப்பில் புதுமைகளை புகுத்த வேண்டும். அவர்களிடம் கண்டிப்பு இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஊக்கமும் ஆக்கவும் படுத்த வேண்டும். பெண் பிள்ளைகளுடைய வளர்ச்சியில் நாம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். மாணவர்கள் முடி வெட்டுவதில் இருந்து அனைத்து விஷயங்களையும் நாம் கண்டிப்புடன் இருந்தால்தான் நம் குழந்தைகள் ஒழுக்கம் உள்ளவர்களாக மாறுவார்கள். அவர்கள் வாழ்வில் மாற்றம் வரும். சின்ன விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டி
வாழ்க்கையை இழந்து விடக்கூடாது. பெரிய விஷயங்கள் சாதனைகள் செய்ய வேண்டும். அதற்கு உழைக்காமல் கஷ்டப்படாமல் நமக்கு கிடைக்காது. ஆகவே தினமும் படிப்பு, விளையாட்டு, இசை ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

வரும் காலங்களில் மாணவர்களுக்கு விளையாட்டுடன் இசை வகுப்புகளும் நடத்த திட்டமிட்டுள்ளோம். கேரளாவில் இஸ்ரோ அமைப்பு நடத்தும் கண்காட்சி மற்றும் பயிற்சி வகுப்புகளை விரைவில் காண இருக்கிறோம். பெற்றோர்கள் மாணவர்களுக்கு ஊக்கமூட்டுவர்களாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் முற்போக்கு சிந்தனைகளுடன் இருக்க வேண்டும். படிப்பு, விளையாட்டு ,கலை ஆகியவற்றில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பள்ளி செய்யும். என்றார். முன்னதாக ஆசிரியை சோபியா மேரி வரவேற்றார். ஆசிரியை நாகராணி நன்றி கூறினார்.