திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 52 துறையுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,

முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்ட அமைச்சர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்களையும் வரவழைத்து அரசின் திட்டப் பணிகள் எவ்வாறு செயல்பட்டு உள்ளது. என்ன வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறோம். என்ன பணிகள் முதலமைச்சர் அறிவித்துள்ளார். எந்தப் பணிகள் தொடங்கி இருக்கிறது. எந்த பணிகளில் தொய்வு இருக்கிறது. எந்த பணிகள் முடிவடைந்துள்ளது என ஆய்வு செய்துள்ளோம்.

அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல்லில் இன்று ஆய்வு மேற் கொண்டுள்ளோம்.
நான், அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் சக்கரபாணி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் சிறப்புத்திட்ட செயல் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர் அனைத்து அரசு ஊழியர்களும் இணைந்து இந்த ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளோம்.
பல்வேறு திட்டங்களில் திண்டுக்கல் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், சில பணிகளில் தொய்வு இருப்பதை கண்டறிந்துள்ளோம்.

இதனை எப்படி விரிவு படுத்த வேண்டும் என்று நானும் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் குறிப்பிட்டு இருக்கிறோம்.
சில பணிகள் குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும் என கூறியுள்ளோம்.
அதனை செயல்படுத்துவதாக அரசு அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்துள்ளனர். அதனை குறிப்பு எடுத்துள்ளோம். அது முதலமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும். இந்தப் பணிகளை விரைவுப்படுத்தும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.